கமல்ஹாசனின் 'இந்தியன் 2'வுக்கும் 'பிக்பாஸ் 3'க்கும் உள்ள கனெக்ட் என்ன தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 30, 2019 12:23 PM
ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் 'இந்தியன்'. இந்த படத்தில் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை களையெடுக்கும் சேனாபதி என்ற சுதந்திரப்போராட்டத் தியாகியாக கமல் நடித்திருந்தார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், விவேக், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், வித்யூத் ஜாம்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் கமல்ஹாசன் சம்மந்தப்பட்ட ஆக்சன் காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனின் மனைவியாக 85 வயது மதிக்கத்தக்க வேடத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கமலின் ஸ்டைலிஷ் அண்ட் லுக்குக்கு காரணமாக இருந்த அம்ரிதா ராம் இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் ஸ்டைலிஷராக பணியாற்றவுள்ளார். இவர் ஏற்கனவே விஸ்வரூபம்-2 படத்தில் பணியாற்றியிருந்தார். இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனின் 90 வயது முதியவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு அவருடைய வயதிற்கேற்ற முகபாவம், துணி அலங்காரமும் அம்ரிதா ராம் செய்து வருகிறார்.