''சாண்டி வீரியமான ஆள்....'' - பிக்பாஸ் சாண்டி குறித்து பிரபல TV தொகுப்பாளர் கலாய்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jul 17, 2019 01:37 PM
தமிழ் சினிமாவில் பிரபல நடன இயக்குநராக அறியப்படுபவர் சாண்டி. இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டுள்ளார். எல்லா பிரச்சனைகளையும் நகைச்சுவையாக எதிர்கொள்வதால் இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில் பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் பாவனா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒவ்வொரு பிக்பாஸ் வீட்டுக்கும் சாண்டி தேவை. ரசிகர்களை ஈர்க்கும் குணம் என்று நக்கலாக தெரிவித்தார்.
பிக்பாஸ் வீட்டில் தற்போது மீரா ஒருபுறம் மாற்றி பேசிக்கொண்டிருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, சாக்லேட் விவகாரத்தால் சாக்ஷி, கவின், லாஸ்லியோவிடையேயான ஈகோ விவகாரங்களால் பிக்பாஸ் சுவாரஸியமாக உள்ளது.
Every #BigBoss house needs a #Sandy! Stud ma he is 👏👏💪😉 #BigBossTamil @vijaytelevision
— Bhavna Balakrishnan (@Bhavna__B) July 17, 2019
Tags : Bhavana, Bigg Boss 3, Sandy