“பஸ்-ல் பெண்களை உரசினேன்”- சரவணன் ஏன் அப்படி சொன்னார்? Controversy-க்கு பதில் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர் சரவணன் கூறிய கருத்து தேசிய அளவில் பெரும் சர்ச்சை ஆனதையடுத்து, எபிசோடில் சரவணன் மக்கள் மத்தியில் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.

Bigg Boss Tamil 3, Day 36, 29 July 2019, Saravanan apologise people for derogatary comment on women

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சனிக்கிழமை (ஜூலை.27) 34ம் நாள் எபிசோடில், மீரா மிதுன் இயக்குநர் சேரன் மீது சுமத்தில் வீண் பழி குறித்து கமல்ஹாசன் விவாதித்தார். அப்போது குறும்படத்தை போட்டுக் காட்டி மீராவின் குற்றச்சாட்டு தேவையற்றது என்பதை கமல்ஹாசன் கூறினார். மேலும், பேருந்தில் பயணிக்கும் பெண்களை ஆண்கள் உரசுவதை ஒப்பிட்டு கமல்ஹாசன் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட போட்டியாளர் சரவணன், தன் கையை உயர்த்தி தானும் தனது கல்லூரி நாட்களில் அத்தகைய செயலை செய்திருப்பதாக கூறினார். சரவணின் இந்த கருத்தை அங்கிருந்து பார்வையாளர்கள் உட்பட அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து, பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை பகிரங்கமாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய சரவணனுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று (ஜூலை.29) 36ம் நாள் எபிசோடில், கன்ஃபெஷன் அறைக்கு வந்த சரவணனிடம், ‘இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் சேனல் பெண்களை எந்த வகையிலும் பெண்களை இழிவுப்படுத்துவது, அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ளாது. கமல்ஹாசனின் நிகழ்ச்சியில் பேசும்போது சொன்ன கருத்துக்கு மக்கள் மத்தியில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்கும்படி’ பிக் பாஸ் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சரவணன், ‘பிக் பாஸ் பார்க்கும் மக்களுக்கு ஒன்றை சொல்ல வேண்டும். கல்லூரி பருவத்தில் பல மாணவர்கள் செய்யும் தவறுகளை நானும் செய்திருக்கிறேன். நான் செய்த தவறை யாரும் செய்யக் கூடாது என்பதை தெளிவுப்படுத்தவே இதனை சொல்ல முயன்றேன், கட் ஆனதால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போனது. யாரையாவது புண்படுத்தியிருந்தால், மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என்று சரவணன் தெரிவித்தார்.