தமிழ்நாட்டில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Aug 13, 2019 08:37 AM
விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தல அஜித் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க, ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்க, ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா, அர்ஜுன் சிதம்பரம், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படம் நான்கு நாட்களில் சென்னை சிட்டியில் மட்டும் 5.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறியிருந்தோம். இதனையடுத்து இந்த படம் தமிழ் நாடு முழுவதும் நான்கு நாட்களில் ரூ.39 கோடி வசூல் செய்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.