பிக் பாஸ் சீசன் 2 - யாஷிகாவுக்கு போஸ்டர் மூலம் Happy Birthday சொன்ன மகத்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 04, 2019 10:12 PM
பிக் பாஸ் சீசன் 2 பிரபலங்களான மகத் ராக்வேந்திரா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். பிக் பாஸ் சீசன் 2-வில் வலுவான போட்டியாளராக கருதப்பட்ட யாஷிகா, சக போட்டியாளரான மகத் மீது காதல் வயப்பட்டார். மகத்திற்கு வெளியே காதலி உள்ள நிலையில், இருவரும் நண்பர்களாக நட்பை தொடர்வோம் என கூறி காதல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து இருவரும் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகினர். பரதன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 2’ திரைப்படத்தல் யாஷிகாவும், மகத்தும் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றனர். அறிமுக இயக்குநர்கள் மகேஷ், வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சூரஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், இன்று (ஆக.4) யாஷிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்ர் மூலம் நடிகர் மகத் ராகவேந்திரா, யாஷிகா ஆனந்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
Happy birthday @yashikaaannand have a great year 😊 #MagVen #Production no 2 #mahatraghavendra
TITLE TO BE REVEALED SOON.... pic.twitter.com/DBRW9B2513
— Mahat Raghavendra (@MahatOfficial) August 4, 2019