முஸ்தஃபா.. முஸ்தஃபா.. விக்ரமனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அசீம்.!.. நெகிழ்ச்சி காரணம்.! bigg boss
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அக்டோபர் 30-ஆம் தேதி ஒளிபரப்பான எபிசோடில், அசீமா? அசலா? மகேஸ்வரியா? யார் வெளியேற்றப்படவிருக்கிறார்கள் என பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். இறுதியாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் இந்த வாரத்தின் டிவி - டி.ஆர்.பி டாஸ்கில் இருந்து மோசமான போட்டியாளர் யார் யார் என்பதை தேர்ந்தெடுக்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது. அதேசமயம் இந்த வாரத்தின் சிறப்பான போட்டியாளர் யார் என்பதையும் சக போட்டியாளர்கள் தேர்வு செய்யக்கூடிய டாஸ்க் நடைபெற்றது. இதில் அசீம் விக்கிரமனை பெஸ்ட் பெர்ஃபார்மராக தேர்ந்தெடுத்திருக்கிறார். இது பிக்பாஸ் ரசிகர்களுக்கும் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சக போட்டியாளர்களுக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் கடந்த காலங்களில் பிக் பாஸ் வீட்டுக்குள் அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் இடையே நடந்த சண்டைகள் மறக்கமுடியாதவை. குறிப்பாக ரேங்கிங் டாஸ்க் சமயத்தில் அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் இடையே நடந்த வார்த்தைப் போர் மிகவும் பிரபலமானது. எனினும் அந்த வார இறுதியில் அசீம், தான் பேசிய வார்த்தைகளுக்காக கமல்ஹாசன் முன்னிலையில் மன்னிப்பு கேட்டார் அதேசமயம் விக்ரமன் மரியாதை கொடுத்து பேசியதாகவும், உரிமைக்காகவே குரல் கொடுத்து பேசியதாகவும் கமல்ஹாசன் விக்ரமனை பாராட்டவும் செய்தார்.
இந்தநிலையில் விக்ரமன் மற்றும் ராபர்ட் மாஸ்டரை இந்த வாரத்தின் பெஸ்ட் பெர்ஃபார்மர்களாக அசீம் முன்மொழிந்தார். இதற்கான காரணத்தையும் சொன்ன அசீம், “அண்மையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நடந்த டிவி - டி.ஆர்.பி டாஸ்கில் விக்ரமன் மனித மலத்தை மனிதர்களே அள்ளுவது குறித்த சிந்திக்கும் வகையிலான விழிப்புணர்வு கான்செப்ட்டை செய்தார். அது உண்மையில் சிறப்பான ஒன்று. அத்துடன் இந்த வாரம் முழுவதுமான டாஸ்குகளில் விக்ரமன் சிறப்பாக மெனக்கெட்டார். எனவே அவரை பெஸ்ட் பெர்ஃபார்மராக குறிப்பிடுகிறேன்” என குறிப்பிட்டார்.
அசீம் குறிப்பிட்ட அந்த டாஸ்கில், விக்ரமனுடன் இணைந்து ரச்சிதா, அமுதவாணன் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.