“தளபதியின் ஃபுட்பால் டீமில் அவளும்.. ஆனா..!” - Miss ஆன பிகில் வாய்ப்பு குறித்து தேவதர்ஷினி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் சிங்கப்பெண்களில் ஒருவராக தன் மகள் நடிக்கும் வாய்ப்பை தவரவிட்டது குறித்து நடிகை தேவதர்ஷினி பிரத்யேகமாக நம்மிடையே பகிர்ந்துக் கொண்டார்.

96 star Niyathi misses her chance in Vijay's Bigil Football team

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் அட்லி இயக்கியுள்ள ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் விஜய் குறிப்பிட்டு நடிகை தேவதர்ஷினி குறித்து பேசியிருந்தார். “‘மெர்சல்’ படத்தில் நடித்த தேவதர்ஷினி அக்காவின் காட்சிகளை அட்லி தூக்கிட்டாரு.. இந்த படத்துல வருவாங்க இல்ல அக்கா.. என அட்லியிடம் கேட்க அவரும் கண்டிப்பாக வருவாங்க..” என்றார். இது கூடுதல் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில், Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை தேவதர்ஷினி பிகில் குறித்தும் தளபதி விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். அவர் பேசுகையில், ‘இசை வெளியீட்டு விழாவில் என் பெயரை குறிப்பிட்டது மிகுந்த ஆச்சர்யம். என் பொண்ணு தளபதியின் ரசிகை. முதல் நாள் ஷூட்டிங்கில் அவரை பார்த்து ஃபோட்டோ எடுக்க வந்தா.. ஷூட்டிங் முடிஞ்சது, கடைசி வரைக்கும் விஜய் சார் கூட ஃபோட்டோ எடுக்க முடியலன்னு உக்கார்ந்திருந்தப்ப, அவர் வந்தாரு.. ‘96’ படம் பார்த்தேன் உங்க நடிப்பை விட உங்க பொண்ணோட பெர்ஃபார்மன்ஸ் பிடிச்சது சொல்லுங்க என்றார்..”

“அவளே இங்க தான் இருக்கா சொல்லிடுங்கன்னு சொன்னேன்..! அப்புறம் விஜய் சாரும், நியத்தியும் 10 நிமிஷம் பேசினாங்க.. பிகில் படத்தின் ஃபுட்பால் டீமில் நியத்தியும் நடிக்க வேண்டியது, ஆனால், 10ம் வகுப்பு பரீட்சை இருந்ததால அவளால நடிக்க முடியல..!” இந்த படத்தில் விஜய்க்கு அக்காவாக நடித்திருப்பதகாவும் தேவதர்ஷினி கூறினார்.

முதன்முதலாக ‘பிகில்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு சென்சாரில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘பிகில்’ திரைப்படம் வரும் அக்.25ம் தேதி ரிலீசாகிறது.

“தளபதியின் ஃபுட்பால் டீமில் அவளும்.. ஆனா..!” - MISS ஆன பிகில் வாய்ப்பு குறித்து தேவதர்ஷினி வீடியோ