"சேனல்ல சொல்லியும் கேக்கல".. அச்சோ.. அமீருக்கு என்ன ஆச்சு..? பாவனி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் பங்கேற்றவர் பாவனி. சீரியல் நடிகையான இவர் தம்முடைய கதையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியதில் இருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
இதனைத் தொடர்ந்து ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தவர்தான் அமீர். விஜய் டிவியின் பிரபல கோரிகிராபரான அமீர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பாவனியுடன் தொடர்ந்து நட்பாக பழகி வருகிறார். அவ்வப்போது பாவனியை தனக்கு பிடித்திருக்கிறது என்பதை நேரடியாக வெளிப்படுத்தி இருக்கும் அமீர், தற்போது பாவனியுடன் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதில் பவானி மற்றும் அமீர் அண்மையில் நடனத்தின் நடுவில் திருமணம் ஆவது போன்ற காட்சிகளில் நடித்திருந்தனர். இந்நிலையில் அந்த நடன ஃபோட்டோக்களை பதிவிட்டு பாவனி தற்போது ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் அமீரிடம் பேசுவது போல் எழுதியிருக்கிறார்.
அதில், “அமீர் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி.. ஒரு நல்ல நடன பயிற்சியாளரை பெற்றிருக்கிறேன். கனவிலும் இப்படி நடனம் ஆடுவேன் என்று நினைக்கவில்லை.. உங்களுடைய பயிற்சியால் நான் எந்த பயமும் இல்லாமல் தற்போது நடனம் ஆடிக் கொண்டிருக்கிறேன்.. உங்களைத் தவிர வேறு யாராலும் இப்படி என்னை வார்த்தெடுக்க முடியாது. உங்களிடம் இருந்து இன்னும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
முட்டியில் காயம் ஏற்பட்டு, சேனல் உங்களை விடுப்பெடுத்துக் கொள்ளவோ அல்லது வீல் சேரில் அமர்ந்தபடி பெர்ஃபார்ம் பண்ண சொல்லியோ சொன்னபோது, அந்த வாய்ப்புகளை ஏற்காமல், உங்களின் மீது நம்பிக்கை வைத்ததற்காக நீங்கள் எதற்கும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக எனக்கு திரும்பிச் சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். நம்மை நம்பி ஒரு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்றால்.. என்ன நடந்தாலும் அதை பாதியில் விட்டு விட்டு செல்லக்கூடாது என்று.. மிகப்பெரிய மரியாதை உங்கள் மீது.. உங்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மீது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரசிகர்களுக்கு பாவனி, “உங்களை என்டர்டைன் செய்வதற்கே நினைக்கிறோம். இது எங்களுடைய சிறந்த நடனம் இல்லை என்று சொன்னாலும் கூட இதை மறக்க முடியாததாக மாற்றி இருக்கிறீர்கள். உங்களுடைய தொடர்ச்சியான அன்புக்கு நன்றி. மேலும் பல விஷயங்களை பண்ணுவதற்கு எங்களை ஊக்குவிக்கிறது நீங்கள் பொழியும் அன்பு..” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Bigg Boss Vaishnavi Announces Seperation பிக்பாஸ் வைஷ்ணவி
- BB Jodigal 2 Amir Pavani Marriage New Promo Viral
- Bigg Boss Contestant In Dhanush Naane Varuven Viral Pic
- Bigg Boss Julie Vampire Facial For Even Skin Tone Viral Post
- Bigg Boss Amir Proposes Pavani During Dance BB Jodigal 2
- Bigg Boss Abhinay Becomes Hero In New Movie
- Bigg Boss Amir Pavani Cute Reaction BB Jodigal 2 New Promo
- Bigg Boss Niroop Acting In New Movie Rainbow With 7 Actress
- Is Bigg Boss Raju Acting In Sardar His Explanation
- Bigg Boss Julie Entry In Popular Tele Vision Serial
- Kamal Haasan Will Join Mohanlal In Malayalam Bigg Boss
- Kamalhaasan Will Join With Mohanlal In Malayaalam Bigg Boss
தொடர்புடைய இணைப்புகள்
- "உனக்குனு சொல்லாத, நமக்குனு சொல்லு Niroop" 😍 மாறி மாறி அன்பை பொழிந்த Yashika, Niroop 🥳
- "நான் எங்க போனாலும், Amir என் பின்னாடியே வந்து"... Shock கொடுத்த Pavni 😳
- அம்மா ஞாபகம் வந்துருச்சு 🥺 தேம்பி அழுத பள்ளி மாணவி... கட்டிபுடிச்சு சமாதானப்படுத்திய Gabriella ❤️
- Glamorous Look- ൽ ചുവട് വച്ച് Deepti IPS 😎😎
- "Breast Feed பண்ணுறத வெச்சு யாரையும் JUDGE பண்ணாதீங்க.." Open-ஆ பேசிய Anita
- Gayathri Arun-ൻ്റെ Charming Photoshoot 🥰🥰
- Variety Dress Changing-മായി Arya 😎😎
- Gayathri Arun Stylish Attitude Look-ൽ 🔥🔥
- വളരെ പാവംപിടിച്ച മനുഷ്യരാണ് കൊല്ലംകാർ ! 😍 | Chef Pillai👨🍳 Reveals
- "Coffee Shop-க்கு கூப்பிட்டாங்க.. Income Tax என்கிட்ட கேட்கும்போது தான் அதிர்ச்சியா இருந்துச்சு.."
- செம்ம Sexy-ஆ வந்த Amir 🔥🤣 Pavni, இந்த Getup-ல நான் உன்ன விட அழகா இருக்கேன்ல 😂🥳
- 🔴 "யாரும் அனுமதி கொடுத்து வாழணும்னு அவசியம் இல்ல"... விட்டெறிஞ்சு பேசிய Archana