பார்வையாளர்களை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அனைவரும் எதிர்பார்த்தபடி முகேன் ராவ் அறிவிக்கப்பட்டார். நிகழ்ச்சியில் டாஸ்க்குகளை சரியாக செய்தது மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களுடன் பாசத்துடன் பழகியது, பாடல் பாடி கலகலப்பாக வைத்திருந்தது போன்றவை அவருக்கு கூடுதல் ரசிகர்களை பெற்றுத்தந்தது.

மேலும் நிகழ்ச்சியில் அவர் பாடிய 'சத்தியமா நான் சொல்லுறேன்டி' பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர்.
இந்நிலையில் முகேன் ராவின் அப்பா பிரகாஷ் ராவ் நேற்று (27-01-2020) மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் முகேன் ராவின் தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.