''நான் இதற்காக அவங்கள காமவெறி பிடித்தவர்கள்னு சொல்றேன்'' - காயத்ரி ரகுராம் அதிரடி
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் தளபதி விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த 'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மதம் குறித்து பேசினார். அதனைத் தொடர்ந்து பேச்சு மிகவும் வைரலானது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் உரை குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்திருந்தார். இது பெரிதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதற்காக அவர் தன்னை ஒரு சிலர் தரக்குறைவாக பேசியதாக ஸ்க்ரீன்ஷாட்டுடன் பகிர்ந்து விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனையடுத்து அவர் தற்போதைய பதிவில், 'என்னுடைய மதத்தை அடுத்தவர்களை தொந்தரவு செய்யாத வகையில் பின் தொடர்கிறேன். என்னை அவர்கள் மத வெறி பிடித்தவர்கள் என்று அழைப்பார்கள். எங்களை பேச வைத்து, தேவையில்லாத விஷயங்களை பேசுபவர்கள், எந்த நெறிமுறைகளும் இல்லாதவர்களை காமவெறி பிடித்தவர்கள் என்று நான் அழைக்கிறேன்'' என்றார்.
I pray my god and follow my religion without disturbing others and they call me “matha veri pudithavargal”. I call those who intrude us and speak about us unwantedly and have no ethics in life as “Kama veri pudithavargal” they r that kind.
— Gayathri Raguramm (@gayathriraguram) March 19, 2020