Brain-eh இல்லையா.. கொஞ்சம் யோசிச்சு கேள்வி கேட்க மாட்ட - அழகு சீரியல் காயத்ரி ஜெயராம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை காயத்ரி ஜெயராம் தற்போது பிஹைண்ட்வுட்ஸ்க்காக கொடுத்த பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

நடிகை காயத்ரி ஜெயராம் பேட்டி | azhagu serial actress gayathri jayaram interview about vijay and vadivelu

பிரபுதேவா நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் நடித்து பிரபலமானவர் காயத்ரி ஜெயராம். அத்திரைப்படத்தில் வடிவேலுவை திட்டும் இவரது காமெடி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் விஜய் நடித்த வசீகரா படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்தார். தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் இவர், சன் டிவியின் அழகு சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் பிஹைண்ட்வுட்ஸ்காக பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலுவை திட்டும் காமெடி பற்றியும் நடன இயக்குநராக இருக்கும் போது பிரபுதேவா ஒரு ஹிட்லர் போல் நடந்து கொள்வார் எனவும் தெரிவித்தார். மேலும் விஜய்யுடன் வசீகராவில் நடித்த போது, அவரது காமெடி சென்ஸை கண்டு வியந்து போனதாகவும் கூறினார். இதற்கிடையில் நெகட்டீவ் ரோல்களை விரும்பி செய்யும் அவர், விஜேவை திட்டுவது போலவும் நடித்து அசத்தினார்.

BRAIN-EH இல்லையா.. கொஞ்சம் யோசிச்சு கேள்வி கேட்க மாட்ட - அழகு சீரியல் காயத்ரி ஜெயராம் வீடியோ

Entertainment sub editor