legend others aadi

அவதாரின் வசூலை முறியடித்த உலக அளவில் முதலிடம் பிடித்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அவெஞ்சர்ஸ் சீரிஸில் இறுதி பாகமாக வெளியான படம் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்'. மார்வெலின் இந்த படம் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வசூல் சாதனை புரிந்துவருகிறது.

Avengers: End game beats Avatar's Box Office collection

இந்த படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை புரிந்த படங்களில் ஜேம்ஸ் கேமரூனின் அவதாரை பின்னுக்கு தள்ளி முல் இடத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 9 வருடங்களுக்கு முன் அவதார் நிகழ்த்திய சாதனையை தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை பகிர்ந்த இயக்குநர் ரஸ்ஸோ பிரதர்ஸ், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு என் இதயம் கணிந்த நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே டைட்டானிக் படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் முறியடித்ததாக கூறப்பட்ட போது, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் ட்வீட் செய்திருந்தார்.

அதில், ''ஒரு ஐஸ்பெர்க் உண்மையான டைட்டானிக்கை மூழ்கடித்தது. தற்போது அவெஞ்சர்ஸ் திரைப்படம் எனது டைட்டானிக்கை மூழ்கடித்துள்ளது'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.