www.garudabazaar.com

“எலிமினேஷன்-க்கு அப்புறம் Live-ல் வர ஏன் இவ்ளோ லேட்..?”.. தனலட்சுமி சொன்ன பதில்..! Bigg Boss Dhanalakshmi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Dhanalakshmi reason for late live after eviction

Also Read | அட.. குட் நியூஸ் சொன்ன ‘சரவணன் மீனாட்சி’ செந்தில் - ஸ்ரீஜா.! குவியும் வாழ்த்துக்கள்.!

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸில் இருந்து தனலட்சுமி, திடீரென வெளியேறி இருந்தது அந்த சமயத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி இருந்தது. அது மட்டுமில்லாமல், தொடர்ந்து எந்தவொரு வீடியோக்களோ, அல்லது நேரலையிலோ தனலட்சுமி இடம்பெற்றதாகவும் தெரியிவில்லை. இதனால், பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் அறையில் தனலட்சுமி இருக்கிறார் என்றும் விரைவில் அவர் திரும்ப வருவார் என்றும் கூட சில கருத்துக்கள் பரவி இருந்தது.

அப்படி இருக்கும் நிலையில், தற்போது அந்த கருத்துக்கள் அனைத்தையும் உடைத்து விஜய் டிவியின் நேரலையில் தோன்றி உள்ளார் தனலட்சுமி. இதில், பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்கள் தான் ஆடிய கேம் குறித்தும் மற்ற போட்டியாளர்கள் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இதில், நேரலையில் தோன்றுவதற்கு தாமதமானதால் மக்கள் அனைவரும் கொந்தளித்து போனதாகவும், லைவ் வர தாமதமானதன் காரணம் என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தனலட்சுமி, "வெளிய வந்ததும் அதை பழகிக்குறதுக்கு Late ஆயிடுச்சு. வீட்டுல கொஞ்சம் Issues இருந்துச்சு அம்மாவுக்கு. அது எல்லாம் முடிச்சுட்டு இங்க வந்து உட்கார்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடுச்சு. அதுக்கு எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க" என தனலட்சுமி தெரிவித்துள்ளார்.

Also Read | Jai Bhim : சென்னை புத்தக கண்காட்சியில் ‘ஜெய் பீம்’ நூல்!.. அறிமுகம் செய்த சூர்யா..!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Dhanalakshmi reason for late live after eviction

People looking for online information on Bigg boss, Bigg Boss 6, Bigg Boss Tamil, Dhanalakshmi, Dhanalakshmi Elimination, Dhanalakshmi live will find this news story useful.