www.garudabazaar.com

"வேதனைய சொன்னது ஒரு குத்தமா? 😅".. அசிம் சொன்னதும் யோசிக்காம கலாய்ச்ச Bigg Boss!! 😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Bigg boss thug life reply to azeem in cycle swap task

Also Read | 'பொன்னியின் செல்வன்' காலண்டர் வெளியீடு.. மணிரத்னத்துடன் கலந்து கொண்ட பிரபல நடிகர்கள்! வீடியோ

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக உள்ளனர்.

Bigg boss thug life reply to azeem in cycle swap task

இதனிடையே, Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

இதில், மாறி மாறி அமர்வதை போட்டியாளர்களே திட்டம் போட்டு மாறி கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். மிகவும் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சிறப்பான டாஸ்க்காகவும் இது அமைந்திருந்தது. மேலும் சைக்கிளை ஓட்டும் நபர்களை தவிர முன்னும் பின்னும் கம்பியில் இருக்கும் நபர்கள், நீண்ட நேரம் இருக்கும் சமயத்தில் சற்று அவதிப்படவும் செய்கிறார்கள்.

Bigg boss thug life reply to azeem in cycle swap task

அந்த சமயத்தில், விக்ரமன் சைக்கிள் ஒன்றை மிதிக்க, அதே சைக்கிளின் முன்பக்க கம்பியில் அமர்ந்திருக்கிறார் அசிம். நீண்ட நேரமாக கம்பி மீது இருந்ததால், சற்று சிரமப்படும் அவர், "பிக் பாஸ் நான் சைக்கிள் ஓட்ட கேட்டேன். ஆனா, இப்படி உட்கார்ந்து போக கேக்கலேயே. ஓட்ட தானே கேட்டேன். ஒட்டுறதுக்கு குடுங்க, நான் விடிய விடிய ஓட்டுவேன்" என பிக் பாஸிடம் குறிப்பிடுகிறார்.

இதற்கு பிக் பாஸ் சொன்ன Thug Life பதில் தான் தற்போது பலரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது. "என்னை கேட்டா எப்படி?. உங்க ஆளுங்கள கேளுங்க" என கூறுகிறார். இடம் மாறி இருக்க வேண்டும் என்பது போட்டியாளர்கள் எடுக்கும் முடிவு தான். அதனை தான் பிக் பாஸ் அப்படி ஒரு Thug Life பதிலாக கூறுகிறார்.

Also Read | தளபதி என்ட்ரி.. வெளியான வாரிசு படத்தின் OFFICIAL ரிலீஸ் தேதி.. வேறமாரி போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss thug life reply to azeem in cycle swap task

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Bigg boss Thug life will find this news story useful.