www.garudabazaar.com

"எனது மனைவிக்கு பிறகு நான் எடுத்த சிறந்த முடிவு இதான்".. மனம் திறந்த ஆரவ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் தமிழ் முதல் சீசன் டைட்டில் வின்னராக பிரபலமானவர் ஆரவ்.

Bigg Boss Arav about His Wife and Kalaga Thalaivan Movie

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலம் அடைந்த ஆரவ், அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.

அப்படி ஒரு சூழலில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத் தலைவன் படத்திலும் வில்லனாக ஆரவ் களமிறங்கி உள்ளார்.இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், ஆரவ் வரும் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Bigg Boss Arav about His Wife and Kalaga Thalaivan Movie

இந்த நிலையில், கலகத் தலைவன் திரைப்படம் & தனது மனைவி குறித்து பல சுவாரஸ்யமான தகவலை Behindwoods நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில், "அப்பா இறந்து பத்து நாட்கள் கழித்து நான் சென்னை வந்ததும் மகிழ் சாரை போய் பார்த்தேன். அவர் சொன்ன கதை, கேரக்டர் சொன்ன விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதன் பிறகு, நான் வீட்டிற்கு வந்து மனைவியிடம் வில்லனாக நடிக்க போவது பற்றி சொன்னேன். வில்லனா ஏன் என்று கேட்டார். அனைவருக்கும் அது ஒரு ஷாக்காக தான் இருந்தது.

எனது மனைவிக்கு பிறகு நான் எடுத்த சிறந்த முடிவு என்றால் அது கலகத் தலைவன் தான். ExtraOrdinary கேரக்டர் அது.  மகிழ் சார் எப்பவுமே ஒரு கேரக்டர் வெச்சா அத ஸ்ட்ராங்கா தான் வைப்பாரு. இல்லன்னா வைக்கவே மாட்டாரு. ஒரு  Cat அண்ட் Mouse கேம் மாதிரி தான் எனக்கும் உதய் சாருக்கும் இருக்கும்." என ஆரவ் கூறினார்

"எனது மனைவிக்கு பிறகு நான் எடுத்த சிறந்த முடிவு இதான்".. மனம் திறந்த ஆரவ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Arav about His Wife and Kalaga Thalaivan Movie

People looking for online information on Arav, Bigg boss, Udhayanidhi Stalin will find this news story useful.