பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஃபோட்டோ - வடிவேலுவுடன் ஒப்பிட்ட ரசிகர் - அவர் பண்ண கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். தனது யதார்த்தமான செயல்பாடுகளால் ரசிகர்களின் மனம் கவர்ந்த அவர், இறுதிப்போட்டி வரைவந்து நல்ல கடுமையான போட்டியாளராக விளங்கினார்.

Bigg Boss actress Raiza Wilson's latest makeover pic is going viral | பிக்பாஸ் நடிகை வெளியிட்ட ஃபோட்டோவை வடிவேலுவுடன் ஒப்பிட்ட ரசிகர்

பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'பியார் பிரேமா காதல்' மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஹரிஷ் கல்யாணுடன் 'தனுசு ராசி நேயர்களே' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஜீ.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக 'காதலிக்க யாருமில்லை', விஷ்ணு விஷாலுடன் 'எஃப்ஐஆர்' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரைசா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன. இந்நிலையில் தனது வித்தியாசமான தோற்றத்துடன் ரைசா இருக்கும் ஃபோட்டோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதற்கு ரசிகர் ஒருவர் வடிவேலுவுடன் ஒப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ரைசா, அதனை யாரும் பீட் பண்ண முடியாது என்று சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor