சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னத்துக்கு சேலஞ்ச் விடுத்த சிரஞ்சீவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை கற்றுக்கொடுத்துள்ளது. அவசர உலகில் பல்வேறு விஷயங்களுக்காக நாம் ஓடிக்கொண்டிருந்த போது ஊரடங்கின் போது தான் நாம் கவனிக்காத பல விஷயங்களை கவனிக்கவைத்துள்ளது.

இந்நிலையில் ட்விட்டரில் Be the real man என்கின்ற சேலஞ்ச் டிரெண்டாகி வருகிறது.  அதன்படி பிரபலங்கள் பலரும் தங்கள் வீட்டின் அன்றாடப்பணிகளை செய்து மற்றவர்களையும் அப்படி செய்து வீடியோவாக வெளியிடும்படி டாக் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டை சுத்தம் செய்வது , சமையல் செய்வது என வீட்டுப்பணிகளை செய்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல இயக்குநர் மணிரத்னத்தையும் இந்த சேலஞ்சிற்காக டாக் செய்துள்ளார். இதனையடுத்து இயக்குநர் மணிரத்னமிடம் இருந்தும், ரஜினிகாந்த்திடம் இருந்தும் வீடியோ வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னத்துக்கு சேலஞ்ச் விடுத்த சிரஞ்சீவி வீடியோ

Entertainment sub editor