www.garudabazaar.com

பிரபல அஜித் படத்தில் நடித்த Bigg Boss நடிகை இப்போ விஜய்யின் LEO படத்திலா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் 'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

Bigg Boss Abirami on board Thalapathy Vijay Leo deets

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "'LEO'-னு டைட்டில் வைக்க இதான் காரணம்".. வசனகர்த்தா கொடுத்த செம்ம தகவல்..!

இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய,  படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.

இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.

Bigg Boss Abirami on board Thalapathy Vijay Leo deets

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை அபிராமி, விஜய் நடிக்கு, லியோ படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. நடிகை அபிராமியும் தமது சமூக வலைதளத்தில் லியோ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை அபிராமி, நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது விஜய் படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து ஜவஹர் மித்ரனின் அடுத்த பட டைட்டில்.. மாஸ் தகவல்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Abirami on board Thalapathy Vijay Leo deets

People looking for online information on Abirami Thalapathy, Bigg boss, Leo, Thalapathy 67, Vijay will find this news story useful.