www.garudabazaar.com

'துணிவு' படம் பார்த்த பிரபல முன்னாள் CSK வீரர்.. ஒரு வரியில் நச் Review!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும் CSK அணி வீரர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.

CSK legend Badrinath watched and tweet about Thunivu Movie

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் 'LEO'.. காஷ்மீரில் இருந்து லீக் ஆன வீடியோவுக்கு தயாரிப்பாளரின் பரபர RETWEET!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

CSK legend Badrinath watched and tweet about Thunivu Movie

Images are subject to © copyright to their respective owners.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

CSK legend Badrinath watched and tweet about Thunivu Movie

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

CSK legend Badrinath watched and tweet about Thunivu Movie

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் துணிவு படத்தினை கண்டு களித்துள்ளார். தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தினை பார்த்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் படம் பார்த்த பிறகு "ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு தமிழ் திரைப்படம்" என்றும் பத்ரிநாத் ட்வீட் செய்துள்ளார். சுப்ரமணியம் பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் பல போட்டிகளில் விளையாடி உள்ளார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலும் அங்கம் வகித்துள்ளார்.

Also Read | "'LEO'-னு டைட்டில் வைக்க இதான் காரணம்".. வசனகர்த்தா கொடுத்த செம்ம தகவல்..!

தொடர்புடைய இணைப்புகள்

CSK legend Badrinath watched and tweet about Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Badrinath, Badrinath tweet about Thunivu Movie, CSK, Thunivu will find this news story useful.