www.garudabazaar.com
iTechUS

Leo ஸ்பாட்டில் ஒண்ணா இருக்கும் விஜய், GVM, Loki.. "இந்த ஃபோட்டோவ எடுத்தது இவருதானா?".. வைரல் ட்வீட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் நடிப்பில் அடுத்ததாக 'லியோ' திரைப்படம் உருவாகி வருகிறது. விஜய் முன்பு நடித்திருந்த 'மாஸ்டர்' திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், லியோ படத்தையும் இயக்குகிறார்.

Leo Shooting spot picture Lokesh Vijay GVM viral

Images are subject to © copyright to their respective owners

இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'விக்ரம்' திரைப்படம், மிகப் பெரிய பிளாக்பாஸ்டர் திரைப்படமாக உருவாகி இருந்தது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யாவும் விக்ரம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

விக்ரம் படத்தை தொடர்ந்து, தற்போது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.  S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பீஸ்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணிபுரிகிறார். மேலும் லியோ திரைப்படம் மூலம் இசை அமைப்பாளர் அனிருத் நான்காவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைக்கிறார். மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், சாண்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்‌.

Leo Shooting spot picture Lokesh Vijay GVM viral

Images are subject to © copyright to their respective owners

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் வைத்து நடைபெறுகிறது. அப்படி இருக்கையில், தனது ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விஜய், கெளதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கனகராஜ், மேத்யூ தாமஸ், ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த புகைப்படத்தை பகிர்ந்து லியோ படத்தில் இணைத் தயாரிப்பாளர் ஜெகதீஷ் போட்டுள்ள கமெண்ட் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. விஜய், லோகேஷ், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜெகதீஷ், 'Pic Courtesy எங்க?" என லோகேஷ் கனகராஜை டேக் செய்து ஜாலியாக கேட்டுள்ளார். அதன்படி இந்த புகைப்படத்தை ஜெகதீசன் எடுத்துள்ளார் என்பது தெரிகிறது.

Leo Shooting spot picture Lokesh Vijay GVM viral

Images are subject to © copyright to their respective owners

ஜெகதீஷ் இப்படி ஜாலியாக கமெண்ட் செய்த சூழலில் அதன் கீழ் லோகேஷ் கனகராஜூம், "இவருதான் ஃபோட்டோ எடுத்தாரு" என்றும் குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ளார். ஜெகதீஷின் ஜாலியான கமெண்ட்டும் அதற்கு லோகேஷ் கொடுத்துள்ள பதிலும் தற்போது அதிகம் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Leo Shooting spot picture Lokesh Vijay GVM viral

People looking for online information on Gautham Vasudev Menon, Jagadish Palanisamy, Leo, Lokesh Kanagaraj, Vijay will find this news story useful.