Kadaisi Vivasayi Others
www.garudabazaar.com

வர்லாம்.. வர்லாம் வா.. வனிதாவைத் தொடர்ந்து ஜூலி Vs தாமரை .. ஆரம்பமாகுது அனல் பறக்கும் வாதம் BBUltimate

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Bigg Boss Ultimate: 24 மணி நேரமும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

julie and thamarai heated argument bigg boss OTT Tamil

பிக்பாஸ் அல்டிமேட்

இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், தாமரை செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Also Read: ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படம். டைரக்டர், மியூசிக் டைரக்டர் இவங்க தான்.. வெளியான  ‘கொலமாஸ்’ அறிவிப்பு

சுரேஷ் எலிமினேற்றம்

அண்மையில் இந்த நிகழ்ச்சியிலிருந்து சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டார். அனைவராலும் சுரேஷ் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்பட்டு வந்த நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் வழங்கப்பட்டது.

திருடன் போலீஸ் டாஸ்க்

அதன்படி, திருடன் போலீஸ் டாஸ்க் என்கிற ஒரு ஜாலியான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த திருடன் போலீஸ் டாஸ்க்கை பொருத்தவரை, முந்தைய சீசனக்ளில் போட்டியாளர்கள் மிகவும் ஜாலியாக இருந்தனர். எனினும் இந்த முறை பிக்பாஸ் ஓடிடி முதல் சீசனிலேயே போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட இந்த திருடன் - போலீஸ் டாஸ்க் சீரியஸாகவும் விறுவிறுப்பாகவும் போய் கொண்டிருக்கிறது.

ஜூலி Vs வனிதா

முன்னதாக, ஜூலி மற்றும் வனிதாவின் சண்டை வெடித்தது. அதன்படி வனிதா, ஜூலியை உட்கார வைத்து, “நடிக்காத ஜூலி.. பிஞ்சிரும் .. என்னத்த எடுத்த? எதுல போட்ட? என் செண்ட் பாட்டிலயா எடுத்து டாய்லட்ல போட்டு ஃப்ளஷ் பண்ண? இப்படி பண்ண உனக்கு அசிங்கமா இல்ல? அது எவ்வளவு விலை தெரியுமா? ஒரு பொருளோட வேல்யூ உனக்கு தெரியாதா? தூக்கி வீசியடிச்சிருவேன்” என காட்டமாக பேசினார். அதன் பின்னர் ஜூலி போலீஸ் ஆனதன் பின்னர் ஜூலிக்கும் வனிதாவுக்கும் இடையிலான வாதத்தில் ஜூலி குரலை உயர்ந்த்திருந்தார்.

ஜூலி Vs தாமரை

இந்நிலையில் தான் தற்போது ஜூலிக்கும், தாமரை செல்விக்கும் முட்டிக்கொண்டுள்ளது. டைமண்டை திருடி வைத்துக்கொள்வது உள்ளிட்ட டாஸ்குகள் அரங்கேறிக் கொண்டிருக்க, போலீஸாக இருக்கும் ஜூலி நகையை எடுத்து வைத்துக்கொள்கிறார். ஆனால் அவர் முந்தைய ஆட்டமும் சரி, இப்போதும் சரி சரியாக ஆடவில்லை என தாமரை குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பதிலுக்கு ஜூலியும் தாமரையை சாடுகிறார். இப்படி இவர்களின் வாக்குவாதம் வலுவாகிறது.

24 மணி நேரமும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்பை போல் அல்லாமல் இந்த ஓடிடி நிகழ்ச்சி, எந்தவித சென்சார் கட் மற்றும் பெரிய அளவிலான காட்சிகள் கட் பண்ணப்படுவது உள்ளிட்ட விஷயங்கள் இல்லாமல் நடக்கிறது. பெரும்பாலும் ஒரு நாள் முழுவதும் நடக்கக் கூடிய விஷயங்களை 24 மணி நேரமும் நேரலையில் காட்டப்பட்டு வருகிறது.

அதே போல் இந்த நிகழ்ச்சியின் 24 மணிநேரமும் நேரலை காட்சி ஓடிக் கொண்டிருப்பது போல, மொத்த நிகழ்ச்சியும் ஒரு மணி நேரமாக இரவு 9 மணிக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தினமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: "இது கொழந்த மேல சத்தியம்".. வயித்துல அடிச்சு சபதம் எடுத்த அர்ச்சனா.. அப்ப எல்லாமே நடிப்பா?

தொடர்புடைய இணைப்புகள்

julie and thamarai heated argument bigg boss OTT Tamil

People looking for online information on BBUltimateTamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate will find this news story useful.