www.garudabazaar.com

Bigg Boss 6 Tamil : "அடிச்சாரு பாருங்க பிக்பாஸ் முதல் Ball-லயே four".. முதல் நாளே 4 பேர் நாமினேஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

bigg boss 6 Tamil 4 housemates nomination first day itself

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது, இதன்படி, முதல் வார டாஸ்காக, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் 4 அணிகளாக பிரிந்து பிக்பாஸ் கிளப்ஹவுஸாக செயல்பட இருக்கிறார்கள். உதாரணமாக கிச்சன் கிளப், வெசல் கிளப், கிளீனிங் கிளப், பாத்ரூம் கிளப் என்றெல்லாம் பிரிக்கப்பட்டு, அணியினருக்கு கொடுக்கப்படும் வேலைகளை வைத்த பிற அணியில் உள்ளர்கள், அந்த அணிக்கு தலைவராக யார் செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள்.

இதற்கு முன்பு வெளியான முதல் ப்ரோமோவில், இந்த போட்டியாளர்களில் மிகவும் கவராத போட்டியாளர்களின் பெயர் மற்றும் காரணத்தை ஹவுஸ்மேட்ஸ் கூறவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அப்போது ஜி.பி.முத்து மட்டும் தனக்கு எல்லாரையும் பிடிக்கும் என சொல்லன், ஆனால் அவர் யாரையாவது தேர்வு செய்தே ஆக வேண்டும் என்று மற்றவர்கள் குறிப்பிட்டனர்.

ஒருவழியாக அனைவரும் நாமினேட் செய்ய, இறுதியில் அதிகம் கவராத போட்டியாளர்கள் 4 நபர்களை நேரடியாக அடுத்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்,  ‘அடிச்சாரு பாருங்க பிக்பாஸ் முதல் பந்துலயே பவுண்ட்ரி’ என்று கூறி வருகின்றனர். ஆனால் ப்ரோமோவில் இவர்கள் 4 பேர் யார் என்று சரிவர குறிப்பிடப்படவில்லை. எனினும் எபிசோடில் தெளிவாக தெரிய வரும் என்பது கூறிப்பிடத்தக்கது.

Also Read | "இதெல்லாம் இருந்தாதான் Dress-அ மாத்துவேன்".. வந்த முதல் நாளே புலம்பி தள்ளிய பிக்பாஸ் ஜனனி.!

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss 6 Tamil 4 housemates nomination first day itself

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Janani, Janani gunaseelan, Vijay Television will find this news story useful.