www.garudabazaar.com

Bigg Boss 6 Tamil : "இதெல்லாம் இருந்தாதான் Dress-அ மாத்துவேன்".. வந்த முதல் நாளே புலம்பி தள்ளிய பிக்பாஸ் ஜனனி.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Janani Gunaseelan demands first day biggboss 6 tamil day one

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் அக்டோபர் 9-ஆம் தேதி மாலை  முதல் விஜய் டிவியிலும் டிஸ்னி + ஹாட் ஸ்டாரிலும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், வீட்டுக்குள் வந்த முதல் நாளே,  பிக்பாஸ் கேமரா முன், “பிக்பாஸ் எனக்கு என் சோப்பு, face wash, தோடு, லிப் ஸ்டிக், லைனர், மஸ்காரா எல்லாமே வேணும். நீங்க தரவில்லை என்றால் நான் டிரஸ்ஸை மாற்ற மாட்டேன். என் தலையை சீவ முடியாமல் இருக்கிறேன். என் சீப்பை தாருங்கள். என் மோதிரங்களை தாருங்கள். நான் ஒவ்வொரு டிரஸ்க்கும் ஒவ்வொரு மோதிரம் போடுவேன்” என்று புலம்புகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், என்னப்பா இது, இந்த பொண்ணு முதல் நாளே இத்தனை கோரிக்கைகளை, புலம்பல்களாக முன்வைக்கிறார் என்று பேசி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Janani Gunaseelan demands first day biggboss 6 tamil day one

People looking for online information on Janani, JananiGunaseelan BiggBossbiggbosstamil biggboss6tamil will find this news story useful.