www.garudabazaar.com

கமல்ஹாசன் - ராஜீவ் மேனன் - தேவி ஸ்ரீ பிரசாத்!!! அடுத்த சம்பவமோ? என்னாவா இருக்கும்?...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: கமல்ஹாசனுடன் இயக்குனர் ஒளிப்பதிவாளார் ராஜிவ் மேனன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

நடிகர் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்தும் வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்வுகளில் தனக்கு பிடித்தமான ஆளுமைகள், பிடித்த புத்தகங்கள், சமூக அரசியலையும் அவ்வப்போது பேசி வருவார். குறிப்பாக காந்தியாரின் கருத்துக்களையும் சித்தாந்தங்களையும் நிஜ வாழ்விலும், சினிமா வாழ்விலும் கடைபிடிப்பவர் கமல்ஹாசன்.

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

குறிப்பாக அவருடைய அன்பே சிவம், ஹேராம், பாபநாசம் போன்ற படங்களில் காந்தியத்தின் தாக்கம் வலுவாகவே இருக்கும். சமீபத்தில் காந்தியாரின் கொள்கைப்படி கதர் ஆடையை பிரபலப்படுத்த முயற்சிகளை கமல்ஹாசன் துவங்கியுள்ளார்.  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கதருக்காக புது பிராண்ட் ஒன்றைத் துவங்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார். தேர்தல் பிரசாரத்துக்காக காஞ்சிபுரம் சென்றபோது இந்த சிந்தனை உதித்ததாக கமல்ஹாசன் கூறினார்.

மன்னிப்பு கேட்ட சித்தார்த்.. "தைரியமா??.." கஸ்தூரியின் கமெண்ட்டால் எழுந்த பரபரப்பு!!

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

 

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

KH - House of Khaddar என தன் நிறுவனத்தின் பிராண்ட் பெயரை அறிவித்தார். இந்தியாவில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை இந்த நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இளைஞர்களை கதர் ஆடை நோக்கி ஈர்க்கவும் முயற்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் அம்ரிதா ராம் இந்த நிறுவனத்தின் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். 

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கான விளம்பர படம் எடுக்க, படப்பிடிப்பு நடந்தது. இந்த படப்பிடிப்பில் கமல்ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் ரவி கே சந்திரன் ISC, ரத்ன வேலு ISC, விளம்பர பட இயக்குனர் ராஜீவ் மேனன் ISC கலந்து கொண்டனர். இதை  ரவி கே சந்திரன் ISC தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC இந்த புகைப்படத்தை பகிர்ந்து 'மறக்க முடியாத புகைப்படம்' என கூறியுள்ளார்.

"Dear Saina அந்த rude-ஆன ஜோக்குக்காக".. மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்.. பரபரப்பு அறிக்கை!

 

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

 

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan New Ad film Shooting with rajiv menon

People looking for online information on கமல்ஹாசன், தேவி ஸ்ரீ பிரசாத், ராஜீவ் மேனன், Devi sri prasad, Kamal Haasan, Rajiv Menon, Rathnavelu, Ravi K Chandran will find this news story useful.