வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் 'மாநாடு' படத்தின் அறிவிப்பு, சிம்புவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இந்த படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியா நடிகர் சிம்பு, ஹன்சிகாவின் 50 வது படமாக உருவாகிவரும் மகா படத்தில் ஜமீல் என்ற பைலட்டாக சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் சிம்பவுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது இந்த படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து காணப்படும் புது ஸ்டில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தை யு.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வாலு படத்துக்கு சிம்பு - ஹன்சிகா இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை எட்ஸெட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.