'நட்புனா என்னனு தெரியுமா ?' - Losliya-வின் செம ஜாலி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார் லாஸ்லியா. அங்கே அவரது குறும்பான நடவடிக்கைகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

Bigg Boss 3 fame Losliya at Behindwoods Gold Medals 2019

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது அவருக்கு Most Popular Person On Television விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனையடுத்து தொகுப்பாளர் நிக்கி அவரிடம் காதில் ஹெட்போன் மாட்டிக்கொள்ள சொன்னார். அதில் மிகவும் சத்தமாக பாடல் ஒலிபரப்பாகும். நிக்கி சொல்வதை அவர் வாய் அசைவை வைத்து திருப்பி சொல்ல வேண்டும். அப்போது நிக்கி நட்புனா என்னனு தெரியுமா என தளபதி பட டயலாக்கை நிக்கி சொல்ல அதனை லாஸ்லியா சொல்வதற்கு சிரமபட்ட காட்சி Fun ஆக இருந்தது.

'நட்புனா என்னனு தெரியுமா ?' - LOSLIYA-வின் செம ஜாலி பதில் வீடியோ

Entertainment sub editor