கார்த்தி நடித்துள்ள 'கைதி' படத்தின் லேட்டஸ்ட் சென்னை பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 02, 2019 02:34 PM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருக்கும் படம் கைதி. இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, திருப்பூர் விவேக் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இந்த படத்துக்கு இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் 'அஞ்சாதே' நரேன், விஜய் டிவி தீனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் படி இந்த படம் தமிழ்நாடு முழுவதும் முதல் நாளில் ரூ 3.61 கோடி வசூலித்துள்ளதாம்.தந்தை மகள் பாசத்திற்கு நடுவே அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ‘கைதி’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.நீவிர் படத்தின் முதல் 8 நாட்கள் காண பாக்ஸ் சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரிப்போர்ட் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி இப்படம் சென்னை சிட்டியில் மட்டும் ரூ.2.42 கோடி வசூலித்துள்ளதாம்.