“ஆஸ்கருக்கு Plan பண்ணியிருக்கேன்..”- ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ குறித்து பார்த்திபன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தை ஆஸ்கர் விருது விழாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக Behindwoods-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

Parthiban had planned to send Oththa Seruppu film to the Oscars

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்திருக்கிறார். ஒன் மேன் ஷோ-வாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்து நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், ஷங்கர், ஆமிர்கான், ரசூல் பூக்குட்டி, யாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள், பார்த்திபனின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக் கூறினர்.

இந்நிலையில், Behindwoods-ன் மாத்தியோசி வித் அக்னி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரத்யேக பேட்டியளித்த படைப்பாளி பார்த்திபன், ஒத்த செருப்பு திரைப்படத்திற்கான தனது போராட்டங்கள், கடின உழைப்பு, எதிர்ப்பார்ப்பு போன்றவற்றை பகிர்ந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழ் சினிமாவின் வர்த்தக சூட்சமம் பற்றிய பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

ஒத்த செருப்பு படத்தை பார்த்த பலரும், இந்த படத்தை பல திரைப்பட விருது விழாக்களுக்கு அனுப்பிய பிறகு, உலக அறங்கில் பாராட்டுக்களை குவித்த பிறகு படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இப்படத்தை ‘ஆஸ்கர்’ விருது விழாவிற்கு அனுப்ப பார்த்திபன் திட்டமிட்டிருப்பதால், அதன் முக்கிய நிபந்தனையாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டுமெனில், திரைப்படம் செப்டம்பர் மாத இறுதிக்குள் ரிலீசாகியிருக்க வேண்டும் என்பதால், வேறு வழியில்லாமல் செப்.20ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக கூறினார்.

வெளிநாடுகளில் இப்படத்தை வெளியிட தயாராக இருந்தும், ரசிகர்கள் காண ஆவலாக இருந்தும், அதனை அங்கு கொண்டு சேர்க்க முடியவில்லை என வருத்தம் தெரிவித்த பார்த்திபன், ஒத்த செருப்பு படத்தை பார்த்துவிட்டு வரும் மக்கள் திருப்தியகாவும், வாயடைத்தும் போவது தான் இந்த படத்தின் வெற்றி என தான் கருதுவதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார்.

“ஆஸ்கருக்கு PLAN பண்ணியிருக்கேன்..”- ஒன் மேன் ஷோவான ‘ஒத்த செருப்பு’ குறித்து பார்த்திபன் வீடியோ