பிக் பாஸ் 3 Eviction - இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 10, 2019 10:11 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் அடுத்த போட்டியாளர் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து ஃபாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா, மீரா, ரேஷ்மா, சரவணன் ஆகியோர் வெளியேறிய நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகும் 7வது போட்டியாளர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த வாரம் பெரிதாக எவ்வித சண்டை சச்சரவுகள் நடக்கவில்லை என்றாலும், நாமினேஷனில் இடம்பெற்றுள்ள சாக்ஷி, லாஸ்லியா, அபிராமி ஆகியோரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இவர்களில் அதிகளவில் ரசிகர்கள் அதாவது ஆர்மிகள் வலுவாக வைத்திருக்கும் லாஸ்லியா இந்த வாரம் கட்டாயம் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில், நமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வாரம் சாக்ஷி வெளியேற்றாப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கடந்த 2 வாரங்களாக எவிக்ஷனுக்கு மிக அருகில் சென்று வந்த சாக்ஷி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் காப்பாற்றப்பட்டார். ஆனால், இம்முறை சாக்ஷி வெளியேற அதிகபடியான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் 3 EVICTION - இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? வீடியோ