First சூப்பர் ஸ்டார் இப்போ உலகநாயகன் - ‘இந்தியன் 2’-ல் இணையும் பேட்ட ஸ்டார்?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 10, 2019 11:49 PM
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், நடிகை பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தற்போது இவர்களை தொடர்ந்து இப்படத்தில் ‘தேசிய விருது’ வென்ற நடிகர் பாபி சிம்ஹா இணைந்திருப்பதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவர் இப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஆக.12ம் தேதி சென்னையில் தொடங்கவிருப்பதாகவும், இந்த ஷெடியூலில் சித்தார்த் மற்றும் பிரியா பவானி ஷங்கரின் காட்சிகள் படமாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.