“தலைவன் கூட ஆட்டம் ஆரம்பம்..!” - சிம்புவுடன் கெத்து காட்டும் பிக் பாஸ் சாண்டி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 29, 2019 11:55 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. சுமார் 105 நாட்கள் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மலேசியாவை சேர்ந்த முகென் ராவ் டைட்டிலை தட்டிச் சென்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த சீசனில் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதிலும், போட்டியில் இரண்டாவது இடத்தை தட்டிச் சென்ற சாண்டி மாஸ்டர் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவைவரது அன்பையும் பெற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது குருவான டான்ஸ் மாஸ்டர் கலாவை சந்தித்தார், அதைத் தொடர்ந்து நடிகர் சிம்பு, பிக் பாஸ் வீட்டில் உடன் இருந்த நடிகர் சரவணன் ஆகியோரையும் சந்தித்தார். இதில் நடிகர் சிம்பு சாண்டியை வரவேற்றதுடன் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். அது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலாகின.
இந்நிலையில், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் கலையரசன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, ‘தலைவன் கூட இனி ஆட்டம் ஆரம்பம்’ என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்காக சிம்பு தயாராகி வருகிறார். மேலும், ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள ‘மஹா’ திரைப்படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்துள்ளார். இது தவிர, கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ‘மஃப்டி’ ரீமேக் திரைப்படத்திலும் நடிக்கிறார்.