BREAKING : "நான் சிரித்தால்" படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடி யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 14, 2019 02:58 PM
‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வருகிறார்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ராணா என்பவர் இயக்குநராக இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் FIRST LOOK போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு நான் சிரித்தால் என டைட்டில் வைத்துள்ளனர். இன்நிலையில் இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இவர் தமிழ் படம் 2வில் சிவாவிற்கு ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே குறும்படங்களை இயக்கியுள்ள ராணா, மிகவும் பிரபலமான அவரது ‘கெக்க பெக்க’ குறும்படத்தின் தழுவலாக இப்படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனை பலவற்றை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக தெரிகிறது.