சூப்பர் ஹிட் ஸ்போர்ட்ஸ் பட ரீமேக்கில் நடிக்கும் ஷாஹித் கபூர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நானி, சத்யராஜ், ஷரத்தா கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் 'ஜெர்சி'. இந்த படத்தை கௌதம் தின்னனூரி இயக்க, அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

Shahid Kapoor to act in Nani's Jersey Hindi remake

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்த படம் வெற்றி படமாக அமைந்தது.  மேலும் இந்த படத்தில் பேசப்பட்ட அப்பா - மகன் இடையிலான காட்சிகள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இந்நிலையில் இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இந்த படத்தில் ஷாஹித் கபூர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தை அல்லு அரவிந்த், அமன் கில் மற்றும் தில் ராஜூ ஆகியோர் இணைந்து தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை தெலுங்கில் இயக்கிய கௌதமே ஹிந்தியிலும் இயக்கவிருக்கிறார்.

ஷாஹித் கபூர் ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஹிந்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.