லாக்டவுனில் எளிமையாக நடைபெற்ற பிக்பாஸ் டைட்டில் வின்னர் மற்றும் நடிகரின் கல்யாணம்
முகப்பு > சினிமா செய்திகள்இந்தியாவில் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் குறைவான நபர்களை கொண்டு நடத்திக்கொள்ள அனுமதி அளித்து வருகின்றனர்.

வழக்கமாக மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட எளிமையாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னரும் நடிகருமான அசுடோஸ் கவுசிக்கின் திருமணம் அவரது வீட்டு மாடியில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.
அசுடோஸ் கௌசிக், தனது நீண்ட நாள் காதலியான அர்பிதாவை கரம் பிடித்தார். நிகழ்வின் இருவீட்டாரும் குடும்பத்தினருடன் மாஸ்க் அணிந்து கலந்து கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : Bigg boss, Ashutosh Kaushik, Marriage, Lockdown