www.garudabazaar.com

105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன்... நிரூப் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்களின் பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன் என்ன பண்ணப்போறேன் தெரியலை, உங்களுடைய ஆதரவு நன்றி தெரிவித்த நிரூப்.

Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks to fans video

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் ஆகியோர் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தனர். இவர்களில் 18வது ஆளாக உள்ளே நுழைந்தவர் தான் நிரூப்.

பிக் பாஸ் வீட்டில் நமிதா மாரிமுத்து 6.1 அடி உயரம் கொண்டவர். இவரை அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு 8 அடி உயரம் கொண்டவர் தான் நிரூப். இவர் நடிகை யாஷிகா ஆனந்த் நெருங்கிய நண்பரும் கூட. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் நிரூப் என்றதும் உடனே ஞாபகம் வருவது அவருடைய நீளமான ஹேர்ஸ்டைல் தான். அவருடைய ஹேர் ஸ்டைல் குறித்து சக போட்டியாளர்கள் பல நேரங்களில் ஆச்சரியம் அடைந்த காட்சிகளையும் இந்த 95 நாள்களில் நாம் பார்த்து இருக்கிறோம்.

"செவரு உயரம் பத்தாது.. ஏத்தி கட்டுங்க!".. Bigg Boss OTT ப்ரோமோவுல கமல் சார் யார சொல்றாரு?

 

Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks to fans video

ஒரு டாஸ்கின்போது தனது தலை முடியை வெட்ட வேண்டிய நிலை வந்தபோது அவர் மிகுந்த கோபத்திற்கு உள்ளானார். நீண்ட முடியை வெட்டி விட்டு தற்போது அவர் ஷாட்டாக முடி வைத்திருந்த புகைப்படமும் வைரல் ஆனது.  இந்நிகழ்ச்சியில் ஃபினாலேவுக்கான டிக்கெட்டை வென்ற அமீர் முதல் நபராக பிக்பாஸ் ஃபைனலுக்குள் நுழைந்தார். அவரை தொடர்ந்து இரண்டாவது ஃபைனலிஸ்ட்டாக நிரூப் தேர்வானார். மூன்றாவது ஃபைனலிஸ்ட்டாக பிரியங்கா தேர்வானார். இதனால் ராஜூ, பிரியங்கா, நிரூப், அமீர் மற்றும் பாவனி ஆகிய 5 பேரும் இறுதி வாரத்தில் இருந்தனர்.

Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks to fans video

 

வருது.. வருது.. 24 மணி நேரமும் ஓடும் Biggboss OTT எப்படி இருக்கும்?.. கமல்ஹாசன் பேசும் புதிய ப்ரோமோ!

பிக்பாஸ் வீட்டிற்குள் நிரூப்பிற்கும், பிரியங்காவுக்கும் தான் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் முதல் நபராக நிரூப் நந்தகுமார் வெளியேறினார். ராஜூ பிக்பாஸ் 5 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். எல்லோரும் அவரவர் வீட்டில் இருந்து குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், நிரூப் நந்தகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks to fans video

அதில், ஹாய் Guys 105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன் உலகமே நிறைய மாறியிருக்கு என்ன பண்ணப்போறன் தெரியலை. உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். தற்போது அவரது வீடியோவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

105 நாட்களுக்கு பிறகு வெளியே வந்திருக்கேன்... நிரூப் வெளியிட்ட வீடியோ.. ரசிகர்களின் பதில் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Big Boss 5 Celebrity Niroop Nandakumar Thanks to fans video

People looking for online information on நிரூப், பிக் பாஸ், Big Boss 5, Niroop Nandakumar will find this news story useful.