தமிழ் சினிமாவை வெகுஜன எதார்த்தத் தளத்திற்கு கொண்டு சென்றதில் முக்கியமானவர் இயக்குநர் பாரதிராஜா.

இவர் சமீபத்தில் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக அனைவராலும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டு பதவியில் இருந்துவந்த நிலையில் இன்று தீடீரென்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
ஜனநாயக முறைப்படி தலைவரை தேர்ந்தெடுக்க வசதியாக பதவியை ராஜினாமா செய்கிறென்.தேர்தலில் போட்டியிடாமல் ஒருமனதாக தேர்வானதால் ஏற்படும் சங்கட்டங்கள் உருவாகுவதை தவிர்ப்பதற்காகவே இதைச் செய்துள்ளேன்.மூத்த இயக்குநராக சங்க வளர்ச்சிக்கு எனது வழிகாட்டுதலும், பேரன்பும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்