போட்டியே இல்லை! மீண்டும் இயக்குநர்கள் சங்க தலைவரான இயக்குநர் இமயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு இயக்குனர் பாரதிராஜா போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Veteran Director Bharathiraja becomes President of Tamil Directors Union

சென்னை கமலா திரையரங்கில் இன்று காலை தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குநர் பாரதிராஜா சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்ரமன் இருந்து வந்தார். இவரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்நிலையில் இயக்குநர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் இன்று நடந்தது. இதில் சங்கத்தின் தலைவராக பாரதிராஜாவை நியமிக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து பாரதிராஜா, போட்டியின்றி தலைவராகி உள்ளார்.