RRR Others USA
www.garudabazaar.com

"பொங்க வெச்சிர வேண்டிதான்!".. தீமைதான் வெல்லும்!.. ‘பாரதி கண்ணம்மா’ வெண்பா மாஸ் எண்ட்ரி! செம Promo

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி ஹரிப்பிரியன் சில மாதம் முன்பு விலகியதை அடுத்து, வினுஷா, கண்ணம்மாக நடித்துவருகிறார்.

Bharathi Kannamma Serial venba reentry after delivery promo

வெண்பா கைது

கதைப்படி வெண்பா ஒரு தவறு செய்யும்போது, கையும் களவுமாக போலீஸாரால் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இது (முந்தைய) கண்ணம்மாவின் சூழ்ச்சியால் நடந்த  நிலையில், வெண்பா சிறை சென்றார்.  அதன் பின்னர் விஷயம் தெரிந்து பாரதி வெண்பாவை வெறுத்தார்.

ஒரே வீட்டில் பாரதி கண்ணம்மா

அதன் பின்னர் கண்ணம்மாவை விவாகரத்து செய்யக்கோரிய பாரதியை, கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ சொல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.  அதன்படி, பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களின் குழந்தைகள் இருவருமே பாரதியின் வீட்டில் தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி ஆகியோரிடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

நடிகை ஃபரீனா

இதனிடையே இந்த சீரியலில் முக்கிய சூழ்ச்சியை செய்து பாரதி & கண்ணம்மா பிரிய காரணமாக இருந்த வெண்ப கேரக்டரில் நடித்துவந்த நடிகை ஃபரீனா நிஜவாழ்வில் கர்ப்பம் தரித்திருந்ததால், சீரியலில் தோன்றாமல் இருந்தார். தற்போது இவருக்கு குழந்தை பிறந்துவிட, இந்த விஷயம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது. இதனை அடுத்து, பாரதி கண்ணம்மா நிகழ்ச்சிக்கு அடுத்து வெண்பா எப்போது வருவார்? என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

‘தீமை தான் வெல்லும்’

இந்நிலையில் ஃபாரீனா, வெண்பாவாக திரும்பி வந்துள்ளார். வெண்பாவின் ரீ எண்ட்ரி குறித்து தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவின் பின்னணியில்,  ‘தீமை தான் வெல்லும்’ என்கிற தனி ஒருவன் பட பாடலை கெத்தாக ஒலிக்கவிடுகிறார்கள். வெண்பா ஜாமினில் வெளியே வருவதாக கோர்ட்டில் சொல்லப்படுகிறது.

பொங்க வெச்சிர வேண்டியதுதான்

இதில் பேசும் வெண்பா, “கொஞ்ச நாள் நான் இல்லன்னதும் கண்ணம்மாவுக்கு குளிர் விடுப் போச்சுல? கண்ணம்மாவும் பாரதியும் ஒன்னா ஒரே வீட்ல. பயங்கர ரொமான்சாமே? அதான் இப்ப நான் வந்துட்டேன்ல.. இனி அவங்க சந்தோஷத்துல பால் ஊத்தி பொங்க வெச்சிர வேண்டியதுதான்!” என்று பேசுகிறார்.

இனி எனக்கு ரெஸ்ட்டே கிடையாது

முன்னதாக வெண்பா வந்ததுமே, அவருடைய வீட்டு பணிப்பெண் சாந்தியிடம் பேசிய வெண்பா, “இனி எனக்கு ரெஸ்ட்டே கிடையாது.. கொஞ்சம் கூட கேப் விடாம அந்த கண்ணம்மாவ டார்ச்சர் பண்ண போறேன்..

இதுவரைக்கும் இந்த வெண்பா எப்படி இருந்தாளோ, அத விட 2 மடங்கா இருப்பேன். இனி நானா அந்த கண்ணம்மாவானு பாத்துடுறேன்.” என சபதம் போடுகிறார்.

ஒன்னும் தெரியாத கண்ணம்மா தான் என்னை ஜெயிலுக்கு அனுப்பினா

அதற்கு சாந்தியோ, “உங்க படிப்பென்ன?  உங்க ரேஞ்ச் என்ன? கண்ணம்மா படிப்பென்ன? அவ ரேஞ்ச் என்ன? அவ போய் உங்களுக்கு போட்டியா?” என்று கூறுகிறார்.

அதற்கு வெண்பாவோ, “அந்த ஒன்னும் தெரியாத கண்ணம்மா தான் சாந்தி என்னை ஜெயிலுக்கு அனுப்பினா” என ஓவென அழுதார்.

Also Read: தியேட்டர்ல ticket கிடைக்காது! இனி அரசுதான் விற்பனை செய்யுமா? முதல் படமே RRR-ஆ? Andhra-வில் அதிரடி சட்டம்!

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma Serial venba reentry after delivery promo

People looking for online information on Barathi Kannamma, Barathi Kannamma Promo today, Bharathi Kannamma, Bharathi Kannamma Promo today, Fareena, Fareena Venba, Farina venba, Venba will find this news story useful.