RRR Others USA
www.garudabazaar.com

சன்னி லியோன் நிகழ்ச்சிக்கு கடும் எதிர்ப்பு.. புதுச்சேரியில் பேனர்கள் கிழிப்பு பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

புதுச்சேரி : புதுச்சேரியில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பேனர்கள் கிழிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Protest against sunny leone dance show in Pondicherry

புத்தாண்டு நிகழ்ச்சி

புத்தாண்டையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் நடிகை சன்னி லியோன் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காக பல டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்து வந்தது.

Protest against sunny leone dance show in Pondicherry

புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்குத் தொடர்ந்து, தேசிய அளவில் பிரசித்தி பெற்ற இசைக்குழுவினர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் நடிகை சன்னி லியோன் பங்கேற்கிறார் என்று கூறப்பட்டது.

பண்ணைப்புரம் போனது தான் மாயம்.. குழந்தைகள் போல மாறிய வெங்கட்பிரபு- பிரேம்ஜி.. கலக்கல் ட்விட்!

எதிர்ப்பு

Protest against sunny leone dance show in Pondicherry

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க கூடாது என்று தமிழர்களம் மற்றும் பொதுநல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது பேனர்கள் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி  கொரோனா பரவல் காரணமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தில் திரைப் பிரபலங்கள் மற்றும் பிரபலமானவர்கள் பங்கேற்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சன்னி லியோன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா இல்லையா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது.

Protest against sunny leone dance show in Pondicherry

பரபரப்பு

இந்நிலையில் தமிழர்களம் செயலாளர் அழகர் தலைமையில் பல பழைய தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது அங்கே  நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களும் கிழித்து எறியப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

1 டிக்கெட் 10 ரூபா தான்... "வலிமை" ட்ரைலர் டிக்கெட் விற்பனை அமோகம்!

குழப்பம்

Protest against sunny leone dance show in Pondicherry

புதுவருட கொண்டாட்டத்தின் போது பல முன்னணி நடிகர், நடிகைகள் சிறப்பு விருந்தினராக அழைத்து நிகழ்ச்சிகள் நடத்துவது சாதாரண விஷயம் தான். ஆனால் இந்த கொரோனா சமயத்தில் இந்த ஏற்பாடுகளை செய்வதற்காக பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் சன்னி லியோனின் நடந்ததை நேரில் காண பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சி நடக்குமா நடக்காதா என்று பெரும் குழப்பத்தில் இருக்கின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Protest against sunny leone dance show in Pondicherry

People looking for online information on சன்னி லியோன், புதுச்சேரி, Dance show, Pondicherry, Protest, Sunny Leone will find this news story useful.