www.garudabazaar.com

Bharathi Kannamma : DNA ரிசல்ட் வந்துருச்சா.. வெளியான பரபரப்பு ப்ரோமோ.. வில்லி வெண்பா ரியாக்‌ஷன் இதுதான்..!😂

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடு பரப்பாகி வருகிறது.

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

பாரதி தனது மனைவி மீதான சந்தேகத்தால் பிரிந்து வாழ்ந்துவரும் சூழலில், வெண்பாவின் சூழ்ச்சியில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டார். ஆனால் அதில் வெண்பாவின் சூழ்ச்சி தெரியவர, வெண்பாவுக்கு ரோஜித்துடன் திருமணம் ஆகிவிட்டது. இதனிடையே பாரதியின் இந்த முடிவால், அவரை அவரது குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்து விட்டனர்.

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரும் ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள். அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

இன்னொரு பக்கம் பாரதையோ டி என் ஏ சாம்பிள்களை கொடுத்திருந்தார். அதற்கான ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கிறார். ரிசல்ட் வந்து விட்டால் பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்து மனைவி கண்ணம்மாவுடனும் தன் இரு குழந்தைகளுடனும் ஏற்று குடும்பமாக வாழ்ந்தாக வேண்டும் என்கிற நிலை அவருக்கு இருந்தது. இன்னொரு பக்கம் வெண்பாவுக்கு ரோஜித் என்னும் கேரக்டருடன் திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் வெண்பா எப்படியேனும் பாரதியை அடைய நினைக்கிறார்.

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

இந்த நிலையில் பாரதியின் டி.என்.ஏ சாம்பிள் ரிசல்ட்ஸ் வந்துவிட்டதாக ப்ரோமோக்கள் வந்துவிட்டன. அதன்படி ஹேமா, லக்‌ஷ்மி இரண்டு குழந்தைகளுமே பாரதியின் குழந்தைகள் என மருத்துவர் கூற பாரதி அதிர்ந்துபோய் அழுகிறார்.

இதனை குறிப்பிட்டு, ரசிகர் ஒருவர் பகிர, இந்த சீரியலில் வெண்பாவாக நடிக்கும் ஃபரீனா ஆசாத், “அய்யயோ.. இந்தா வாரேன்” என தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

ஏற்கனவே பாரதியின் டிஎன்ஏ ரிசல்டில் குழப்பத்தை விளைவித்ததும், பாரதியால் குழந்தை பெறுவதற்கான உடற்தகுதி இல்லை என அவரை குழப்பியதுமே வெண்பாதான் என்பதும், அவரது சூழ்ச்சியால்தான் பாரதி & கண்ணம்மா பிரிந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma new promo DNA Result Venba reaction

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma New Promo, Bharathi Kannamma Sertial today, Bharathi Kannamma Sertial today episode, Bharathi Kannamma Sertial today Promo will find this news story useful.