www.garudabazaar.com

bharathi kannamma: "ஆல்யா மானசா கேரக்டர் ரீ எண்ட்ரி".. அடுத்தடுத்த திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியின் 'பாரதி கண்ணம்மா' சீரியல், தற்போது அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளாக சென்று கொண்டிருக்கிறது.

alya manasa character re enters in bharathi kannamma

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு, பிறந்த இரண்டு குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர், தனித்தனியாக தந்தை மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாரதி மருத்துவராக பணிபுரியும் மருத்துவமனையில் வேலைக்கு செல்கிறார் கண்ணம்மா. 

முன்னதாக குழந்தை லட்சுமிக்கு பாரதி தன் தந்தை என்றும், ஹேமா தன் சகோதரி என்றும் அனைத்து விஷயங்களும் தெரிய வர, எப்போதும் தந்தை மற்றும் ஹேமாவின் அருகே இருக்க முயற்சி செய்கிறார் அவர். இன்னொரு பக்கம் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் ஏற்கனவே கணவர் மனைவியாக வாழ்ந்து பின்னர் சந்தர்ப்ப சூழல்நிலையின் காரணமாக பிரிந்தது பற்றி, ஹேமாவுக்கு எதுவும் தெரியாது.

இதனிடையே வெண்பா - ரோஹித் விவகாரத்தில் ரோஜித் ஏமாற்றி வந்தது தெரிய வர, வெண்பா மீண்டும் பாரதியை காதலிப்பதாக சொல்லி தொந்தரவு செய்ய தொடங்கிவிட்டார். ஆனால் பாரதியோ டி என் ஏ டெஸ்ட்க்கு தயாராகிவிட்டார். ஒருவேளை அவருக்கும் லஷ்மி மற்றும் ஹேமா ஆகிய குழந்தைகளுக்கும் டி என் ஏ டெஸ்ட் மேட்ச் ஆகவில்லை என்றால், வெண்பா கழுத்தில் தாலி கட்டவும் பாரதி உறுதிமொழி எடுத்துள்ளார்.

இந்நிலையில்தான் ஹேமாவின் அம்மாவாக பிரபல ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் போட்டோ காட்டப்படுகிறது. அத்துடன் ஆல்யா மானசா, ‘மறைந்த’ ஒரு கேரக்டராக காட்டப்படுகிறார். அவருடைய ஃபோட்டோவை காட்டித்தான், குழந்தை ஹேமாவிடம் ‘அம்மா’ என்று சொல்லி வைத்திருக்கிறார் பாரதி. ஏற்கனவே பாரதி கண்ணம்மாவின் தொடக்கத்தில் ஆல்யா மானசாவின் கேரக்டர் இருந்தது. பின்னர்தான் பாரதி, கண்ணம்மாவை திருமணம் செய்துகொண்டார். 

இந்நிலையில் ஆல்யா மானசாவின் அம்மா வீட்டுக்கு போகும் குழந்தை ஹேமா, அங்கு, மாலையுடன் இருந்த ஆல்யா மானசாவின் ஃபோட்டோவை பார்த்ததும் அதிர்ச்சியாகி அழுதேவிட்டார்.  இந்த வாரம் முழுவதும் இப்படி பரபரப்பு திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா சக்கை போடு போடவிருப்பதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

alya manasa character re enters in bharathi kannamma

People looking for online information on Alya Manasa, Barathi Kannamma episode today, Barathi Kannamma today episode, Bharathi Kannamma will find this news story useful.