www.garudabazaar.com

"ஒழுங்கு மரியாதையா ஊர் பக்கம் போயிடு".. கண்ணம்மாவைத் தேடி சென்ற பாரதி.. இப்படி ஆயிடுச்சே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும்  பாரதி கண்ணம்மா தொடரின் இன்றைய எபிசோட் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

Bharathi Kannamma December 16th Episode Glimpse

Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் SURYA 42.. ஷூட்டிங் தமிழ்நாட்டில இந்த ஊர்லயா! செம்ம

பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர். மேலும் வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது.

ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது.

இச்சூழலில் குழந்தை ஹேமா, லெட்சுமி இருவரையும் அழைத்து கண்ணம்மா கண் காணாத இடத்திற்கு பேருந்தில் பயணம் செய்கிறார்.

கண்ணம்மா & குழந்தைகளை அழைத்து வர குடும்பத்துடன் பாரதி, கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். வீட்டில் கண்ணம்மா & குழந்தைகள் இல்லாமல் போவதை கண்டு கதறி அழும் பாரதி, கண்ணம்மாவை "எங்கே போய் தேடுவேன்" என தலையில் அடித்து கொள்கிறார்.

பின்னர் கண்ணம்மா & குழந்தைகளைத் தேடி பாரதி பயணிக்கிறார். கொட்டும் மழையில் கண்ணம்மா & குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து தேட துவங்குகிறார். அப்போது புதிய எண்ணில் இருந்து ஒரு லோகேஷன் மேப் பாரதிக்கு செய்தியாக வருகிறது. ஹேமா அனுப்பிருப்பாளோ? என்ற கேள்வியுடன் பாரதி கண்ணம்மாவை தேடுகிறார்.

Bharathi Kannamma December 16th Episode Glimpse

ஒரு வழியாக பாரதி கண்ணம்மாவை கண்டு பிடித்தும் விடுகிறார். "நானும் என் குழந்தைகளும் இங்கு நிம்மதியாக வாழ்றோம் . தயவுசெய்து இங்கே இருந்து கிளம்பி போங்க"  என கண்ணம்மா சொல்ல, பாரதி, கண்ணம்மா கையை பிடித்தி இழுக்கிறார். ‌இதனால் ஊர்மக்கள் பஞ்சாயத்தை கூட்டுகின்றனர். பஞ்சாயத்து தலைவர் ஒருவர், "ஒழுங்கு மரியாதையா ஊர் பக்கம் கிளம்பி போயிடு அவ்வளவு தான் நாங்க சொல்லுவோம்" என பாரதியை மிரட்டுகிறார்.

இனி கண்ணம்மா பாரதியுடன் செல்வாரா? அல்லது பாரதி அடுத்து என்ன முடிவு எடுப்பார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Also Read | அஜித்தின் பைக் உலக டூர்.. முதல் நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்து அசத்தல்! வைரல் PHOTOS

தொடர்புடைய இணைப்புகள்

Bharathi Kannamma December 16th Episode Glimpse

People looking for online information on Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode, Vijay tv will find this news story useful.