www.garudabazaar.com

தனி விமானத்தில் ரஜினியுடன் செல்ஃபி எடுத்த A.R. ரஹ்மான்.. கூட இவங்க வேற இருக்காங்க 😍

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

Super Star Rajinikanth AR Rahman AR Ameen Selfie Photo

Also Read | இந்திய டூரின் முக்கிய தருணங்கள்.. பாடகி பிரகதி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

Super Star Rajinikanth AR Rahman AR Ameen Selfie Photo

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "லால் சலாம்" படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. லால் சலாம் படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்நாளில் ஜெயிலர் படத்தின் குறு முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Super Star Rajinikanth AR Rahman AR Ameen Selfie Photo

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடன் சேர்ந்து கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இறை வழிபாடு செய்தனர்.  இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. இதற்கு முன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மகனும் பாடகருமான அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ரஹ்மான் எடுத்த செல்ஃபி புகைப்படங்களை ரஹ்மானை டேக் செய்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | பதான் படத்தின் முதல் சிங்கிள் பாடல்.. தீபிகா படுகோனேக்கு ஆதரவாக ட்வீட் செய்த பிரகாஷ் ராஜ்!

தொடர்புடைய இணைப்புகள்

Super Star Rajinikanth AR Rahman AR Ameen Selfie Photo

People looking for online information on Aishwarya Rajinikanth, AR Ameen, AR Rahman, Rajinikanth, Rajinikanth AR Rahman AR Ameen Selfie, Super Star Rajinikanth will find this news story useful.