பரதநாட்டியம் ஆடி அசத்திய DD.. அதிலேயும் அந்த ரியாக்சன்ஸ் தான் ஹைலைட்ஸ்.! வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தொகுப்பாளினியும் நடிகையுமான திவ்யதர்ஷினி பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

Also Read | தொழிலதிபருடன் நடிகை பூர்ணாவுக்கு 'டும் டும் டும்' .. ஃபோட்டோவுடன் வெளியான திருமண தகவல்

விஜய் டி.வி.யில் பிரபல தொகுப்பாளியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. டிடி என சுருக்கமாக அழைக்கப்படுபவர். இவரின் ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல் பங்குபெற்ற விக்ரம் ஸ்பெஷல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அதுபோலவே விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டையும் தொகுத்து வழங்கி இருந்தார்.

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

இந்நிலையில் திவ்யதர்ஷினி பரத்நாட்டியம் ஆடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கால்களை அசைக்காமல் கை, உடல் மற்றும் முக பாவணைகளை மட்டும் அசைத்து இந்த பரதத்தை திவ்யதர்ஷினி ஆடியுள்ளார். சில மாதங்களுக்கு முன் கால்களில் உள்ள மூட்டுக்கு சிகிச்சை எடுத்தது பற்றி நடிகை DD அறிவித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த LEGEND ஆடியோ ரிலீஸ் நிகழ்வுக்கும் வாக்கிங் ஸ்டிக்குடன் DD வந்தது குறிப்பிடத்தக்கது.

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

திவ்ய தர்ஷினி, ஏற்கனவே விசில், பா. பாண்டி போன்ற படங்களில் நடித்துள்ள டிடி தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் டிடி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

சுந்த சி இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். இந்த சுந்தர் சி திரைப்படத்தை குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கிறது. சம்யுக்தா சண்முகநாதன். ஏற்கனவே, டிடி, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்லியம்ஸ், அம்ரிதா அய்யர், ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர்.

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இந்தப் பூஜையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சென்னையிலும் பிறகு ஊட்டியில் ஒரே ஷெடியூலில் படப்பிடிப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

Also Read | அப்படி போடு.. விக்ரம் ஆல்பத்துல கமலுக்கு புடிச்ச பாட்டு இதான்.!.. அவரே சொன்ன பதில்..

பரதநாட்டியம் ஆடி அசத்திய DD.. அதிலேயும் அந்த ரியாக்சன்ஸ் தான் ஹைலைட்ஸ்.! வைரல் வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

DD Dhivadarshini Dancing Bharathanatiyam Video Goes Viral

People looking for online information on DD, Dhivadarshini, Dhivadarshini Dancing Bharathanatiyam Video will find this news story useful.