www.garudabazaar.com

“ஆஹா கதையோட கிளைமேக்ஸா?”… கோபிக்கு செம்ம check… பரபரப்பில் பாக்கியலட்சுமி சீரியல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்கியலட்சுமி சீரியலின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.

Bhakyalakshmi serial new engaging promo video

தியேட்டரில் தெறிக்க விட்ட ’நாட்டுக்கூத்து’ பாடல்… வெளியான செம்ம அப்டேட்!

பாக்கியலட்சுமி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற தொடர்களில் ஒன்று. இந்த தொடர் இதுவரை 360 க்கும் மேற்பட்ட எபிசோட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த தொடரில் சுசித்ரா, சதிஷ்குமார், திவ்யா சுரேஷ் மற்றும் ரேஷ்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரில் மையக் கதாபாத்திரங்களில் ஒன்றான செழியன் கதாபாத்திரத்தில் இதுவரை நடிகர் ஆர்யன் நடித்துவந்தார்.

Bhakyalakshmi serial new engaging promo video

பாக்கியலட்சுமியை ஏமாற்றும் கோபி…

இந்த சீரியல் தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தன்னுடைய மனைவி பாக்கியலட்சுமிக்கு துரோகம் செய்த கோபி, ராதிகாவுடன் உறவில் இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல், பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, ராதிகாவை திருமணம் செய்து கொள்ளும் முடிவையும் கோபி எடுத்துள்ளார். பாக்கியலட்சுமியை ஏமாற்றி எப்படியாவது விவாகரத்து வாங்கிவிட வேண்டும் என குறுக்கு வழிகளை மேற்கொண்டார். இது சம்மந்தமான நீதிமன்றக் காட்சிகள் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.

Bhakyalakshmi serial new engaging promo video

ராதிகா சந்திப்பை தவிர்க்கும் கோபி….

விவாகரத்துக்காக வேண்டி, கோபி ஏகப்பட்ட நாடகங்களையும், பொய்களையும் பேசி பாக்கியலட்சுமி மற்றும் ராதிகா ஆகியோருக்கு இடையே, மிகப்பெரிய கேம் ஆடி வருகிறார். ராதிகா மற்றும் பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராதிகாவுடன் பழக்கத்தில் கோபி இருக்கும் நிலையில், தோழி பாக்கியலட்சுமி தான் கோபியின் மனைவி என்பது, ராதிகாவுக்கு தெரியாது. இதையடுத்து பாக்கியலட்சுமியோடு ராதிகாவை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் அதில் இருந்து எப்படியாவது தப்பித்து வந்தார் கோபி…

Bhakyalakshmi serial new engaging promo video

கோபிக்கு புது செக்….

இந்நிலையில் தற்போது கோபி சற்றும் எதிர்பாராத விதமாக பாக்கியலட்சுமியோடு ராதிகாவை சந்திக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. ஆசிரமத்துக்கு கோபியை அழைத்துள்ள பாக்கியலட்சுமி, அங்கு ராதிகா வருகிறார் என்றும் இன்று எப்படியும் கோபி அவரை சந்தித்தே ஆகவேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டு பதற்றமாகும் கோபி ”ஆஹா இன்னையோட இந்த கதையோட கிளைமேக்ஸா?” என மனதுக்குள்ளே புலம்புகிறார். இப்போது வெளியாகி இருக்கும் இந்த புதிய வீடியோவால் இந்த வார எபிசோட்கள் மேல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

”உன்ன வளக்குறதே உலகப் போரா இருக்குடா”….’ ஓ மை டாக்’ படத்தின் கலக்கலான டிரைலர்!

தொடர்புடைய இணைப்புகள்

Bhakyalakshmi serial new engaging promo video

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.