www.garudabazaar.com

BOX OFFICE: பீஸ்ட் படத்தின் வசூல்.. டிக்கெட் முன்பதிவில் படைத்த சூப்பர் சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பீஸ்ட் படத்தின் முன்பதிவு டிக்கெட் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Beast Movie Box office collection USA Ticket Reservation

AK61: ஹாட்ரிக் வெற்றிக்கு ரெடியான அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி! செம மாஸா ஆரம்பமான ஷூட்டிங்!

விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் திரைப்படம் பீஸ்ட். பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.

இசையமைப்பாளர் அனிருத் இசையில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து YouTube-லும் Instagram Reels-லும் பல சாதனைகளை படைத்து வருகிறது, மற்றும் சில தினங்களுக்கு முன் (19.03.2022) அன்று வெளிவந்த, கு.கார்த்திக் வரிகளில் தளபதி விஜய் பாடிய ஜாலியோ ஜிம்கானா பாடல் ரிலீஸாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. 3 சிங்கிள் பாடல்களும், புரோமோக்களும் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் ஏற்படுத்தி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறது.

Beast Movie Box office collection USA Ticket Reservation

தமிழ் புத்தாண்டு  தினத்தை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி படம் ரிலீஸாகும் என படக்குழு அறிவித்தது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Beast Movie Box office collection USA Ticket Reservation

பீஸ்ட் படத்தின் அமெரிக்க தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை வலிமை படத்தின் அமெரிக்க வினியோகஸ்தரான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளனர்.

Beast Movie Box office collection USA Ticket Reservation

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் உலகம் முழுவதும் துவங்கி உள்ளது. அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. (அதாவது இந்திய நேரப்படி ஏப்ரல் 13 அதிகாலை 5 மணி அளவில்) இதற்கான டிக்கெட் விலையாக 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும். மேலும் தளபதி விஜய்யின் பீஸ்ட் படம் அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் $350,000 டாலர்களை கடந்துள்ளது. இந்திய மதிப்பில் 2,65,74,138.05 கோடி ரூபாய் ஆகும்.

KGF Chapter 2 படத்தின் ஒரு FDFS டிக்கெட் இம்புட்டு ரூபாயா? வெளியான OFFICIAL தியேட்டர் கட்டண விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Beast Movie Box office collection USA Ticket Reservation

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast Movie Box office, Nelson Dilipkumar, Pooja Hegde, Vijay, Yogi Babu will find this news story useful.