www.garudabazaar.com

அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகும் நாயகி.? உண்மை என்ன? Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'பாக்கியலட்சுமி' தொடர் குறித்து தான் தற்போது ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்கள் பார்வையும் உள்ளது.

baakiyalakshmi lead suchitra quits serial truth explained

பாக்கியா தாலி எடுத்து குடுப்பாளா??. ராதிகாவின் அலப்பறையால் விழி பிதுங்கிய கோபி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் நாயகன் கோபி, மனைவி பாக்கியலட்சுமியை ஏமாற்றி விட்டு, ராதிகாவை திருமணம் செய்யத் தயாராகியுள்ளார்.

இதற்கான முடிவை எடுத்துவிட்ட கோபி, பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்யும் திட்டங்களை வகுத்திருந்ததும் அதிக பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது.

அதிர்ச்சியில் பாக்கியலட்சுமி ரசிகர்கள்

தொடர்ந்து, ராதிகா வீட்டில் கோபி இருக்கும் போது, பாக்கியலட்சுமி என்ட்ரி கொடுத்த காட்சிகள் எல்லாம் அதகளம் தான். அப்படி இருக்கும் சூழலில், பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சுசித்ரா, தொடரில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. பலரும் இது குறித்து கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வந்தனர். இதன் காரணமாக, பாக்கியலட்சுமி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

baakiyalakshmi lead suchitra quits serial truth explained

ஒத்துப்போகும் கதாபாத்திரம்

தமிழகத்தில் அனைவரின் வீட்டிலும், பாக்கியா என்னும் எளிமையான கதாபாத்திரம் மூலம் சென்று புகழ் அடைந்தவர் நடிகை சுசித்ரா. வீட்டில் நம்முடைய அம்மாக்கள் போல மிகவும் அப்பாவியாக இருப்பதால், இவரது நடிப்பு மற்றும் கதாபாத்திரம், தமிழக குடும்பங்கள் மத்தியில் எளிதாக போய் சேர்ந்தது.

உண்மை என்ன?

இதனிடையே, பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகுவது குறித்த தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வேதனையை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலக போகிறாரா என்பது பற்றி, சுசித்ராவிடம் 'Behindwoods' பேட்டி எடுத்திருந்தது.

baakiyalakshmi lead suchitra quits serial truth explained

நான் இப்போ பிசியா இருக்கேன்

அப்போது பேசிய நடிகை சுசித்ரா, "அப்படி ஒன்றுமில்லை. நான் இப்போது கூட சீரியல் ஷூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியல் தொடர்பான ப்ரோமோஷன் வேலைகளிலும் பிசியாக உள்ளேன். அப்படி இருக்கையில், நான் எப்படி சீரியலை விட்டு செல்வேன். அது நடக்குமா?. பொய்யான ஒரு செய்தி தான் அது" என தன்னுடைய விளக்கத்தை அளித்துள்ளார்.

ரசிகர்கள் நிம்மதி

டிரெண்டிங்கில் இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் நடிகை, திடீரென விலக போவதாக செய்திகள் வலம் வந்து, அந்த தொடரின் ரசிகர்களை கடும் வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. ஆனால், அவை அனைத்தும் வதந்தி தான் என நடிகை சுசித்ராவே உறுதி செய்துள்ளதால், ரசிகர்கள் தற்போது தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

"அறைஞ்சுருவேன்" .. "அடிக்குற வேல வெச்சுக்காத" வெடித்த பாலாஜி - நிரூப் சண்டை.. BB Ultimate

தொடர்புடைய இணைப்புகள்

baakiyalakshmi lead suchitra quits serial truth explained

People looking for online information on Baakiyalakshmi, Baakiyalakshmi serial, Baakiyalakshmi Serial Episode, Vijay Television will find this news story useful.