புதிதாய் ! பிரம்மாண்டமாய்! Behindwoods Gold Mic Music Awards நிகழ்ச்சி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா நிறுவனமான Behindwoods 16 வருடங்களுக்கும் மேலாக ஊடகத்துறையில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அரசியல், பொதுநிகழ்வுகள், சினிமா, பிரபலங்களின் பேட்டிகள் என அனைத்துத் தளங்களிலும் தகவல்களை சுவாரஸியமாகவும் உடனுக்குடனும் வழங்கி வருகிறது.

Behindwoods Mic Music awards happen in oct 6 in Kalaivanar Arangam

2014  ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு வருடமும் Behindwoods Gold Medals என்ற பிரம்மாண்ட விழா திரைத்துறை மற்றும் அல்லாமல் பல துறைகளிலும் திறமையான கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு Icon of Inspiration விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகிறது.

இந்நிலையில் நாம் எந்த மனநிலையில் இருந்தாலும் எங்கோ காற்றில் பறந்து வந்து சட்டென நம் மனதை மடைமாற்றி மகிழ்விக்கும் ஆற்றல் இசைக்கு மட்டுமே உண்டு. பலருக்கு அவர்களின் மனதின் காயங்களை ஆற்றும் மருந்தாகவும் இசை விளங்குகிறது. அத்தைகைய இசையை வழங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக Behindwoods நிறுவனம்  முதல் முறையாக மிகவும் பிரம்மாண்டமாக Behindwoods Gold Mic Music Awards என்ற விருது நிகழ்ச்சியை அரங்கேற்றவிருக்கிறது.

இசைத்துறையைச் சேர்ந்த மிகவும் முக்கியமான இசைக் கலைஞர்கள் மற்றும் மிகவும் திறமைவாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கின்றனர். 

இந்த நிகழ்ச்சியில் இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படும் இசைக்குழுக்களான தாய்குடம் பிரிட்ஜ் (Thaikudam Bridge)  மற்றும் கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் (Castless Collective) குழுவினர் மேடையில் தங்களது இசையால் பார்வையாளர்களை மகிழ்விக்கவிருக்கின்றனர்.

இந்த நிகழச்சி வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள https://www.behindwoods.com/gold-mic-music-awards-2019/tickets/ என்ற முகவரியை கிளிக் செய்து உங்கள் டிக்கெட்டுகளை புக் செய்துகொள்ளுங்கள்.