சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' செகண்ட் லுக் போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாகவிருக்கும் “தர்பார்” படத்தின் செகண்ட்லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Super Star Rajini AR Murugadoss Darbar second look

லைக்கா புரொடக்ஷன் சார்பாக சுபாஷ்கரன் தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வரும் படம் 'தர்பார்'.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

பேட்ட படத்திற்கு பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் “தர்பார்”. ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கும் முதல்படம் இது. பாட்ஷாவுக்கு பிறகு நீண்ட கால இடைவெளிக்கு பின் காலா படத்தில் மும்பை சார்ந்த கதைகளத்தில் நடித்தார் ரஜினி. தற்போது இந்த படமும் மும்பை சார்ந்த கதைகளம்தான் என கூறப்படுகிறது.

தர்பார் படத்துக்கான ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றது. இதில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்திருக்கிறார். நீண்ட வருட இடைவெளிக்கு பிறகு போலீஸ் கதாப்பாத்திரத்தில் ரஜினி நடிப்பது ரசிகர்களிடையே படத்தின் மீது தீராத ஆவலை ஏற்படுத்தியுள்ளது. மூன்று முகம், கொடி பறக்குது படங்களுக்கு பிறகு ரஜினி போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் கெட் அப்பில் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.