RRR Others USA
www.garudabazaar.com

"நாளைக்கு இருக்கு கச்சேரி" விஜய் ரசிகர்களை எகிற வைத்த நெல்சன் ட்வீட்.. அதுவும் ஒரே வார்த்தைல

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் 'பீஸ்ட்'. கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார், பீஸ்ட் திரைப்படத்தியும் இயக்கியுள்ளார்.

beast director Nelson Dilipkumar single word tweet gone viral

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகி பாபு, VTV கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.

பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம், இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பேன் இந்தியன் 'பீஸ்ட்'

வரும் ஏப்ரல் மாதம் 13 ஆம் பீஸ்ட் திரைப்படம், ஐந்து மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளதை படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான 'அரபிக்குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' ஆகிய பாடல்கள், பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை ஆட்டம் போட வைத்து வருகிறது.

டீசர் அல்லது டிரைலர் எப்போ?

பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் காரணமாக, பீஸ்ட் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. இன்னொரு பக்கம், படம் வெளியாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், விரைவில் டிரைலர் அல்லது டீசர் குறித்த அப்டேட்டுகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் உள்ளனர். அதே போல, பீஸ்ட் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக வேண்டும் என்றும், ரசிகர்கள் ட்விட்டரில் குறிப்பிட்டு, அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரே வார்த்தையில் ட்வீட்

இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், ஒரே வார்த்தையில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். "நாளை.." என மட்டும் தன்னுடைய ட்வீட்டில் நெல்சன் குறிப்பிட்டுள்ள நிலையில், நாளைய தினத்தில் பீஸ்ட் படத்தின் டிரைலர் அல்லது டீசர் குறித்த அப்டேட் வரலாம் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதுவரை, டிரைலர் கேட்டு காத்து வந்த ரசிகர்கள், பீஸ்ட் படக்குழு கொடுக்க போகும் அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை அறியும் ஆவலுடன் நாளைய தினத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள 'KGF 2' படத்தின் டிரைலரை, இயக்குனர் நெல்சன் நேற்று பாராட்டி ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

beast director Nelson Dilipkumar single word tweet gone viral

People looking for online information on Anirudh Ravichander, Beast, Beast Update, Nelson Dilipkumar, Pooja Hegde, Sun pictures, Vijay, Yogi Babu will find this news story useful.